வெள்ளி, 11 மார்ச், 2011

தீ என்றால் என்ன.

தீ என்பது ஒரு வேதியியல் மாற்றமாகும். பொருளானது எரியும் போது மிக வேகமாக ஆக்ஸினேற்றம் அடைகிறது. இதனால் வெப்பம், ஒளி மற்றும் பலவிதமான வாயுகள் வெளியேற்றுகிறது.
               
            ஒரு எரியக்கூடிய பொருள் தேவையான அளவு உஷ்ணமடைந்த்தும் காற்றிலுள்ள பிராண வாயுடன் சேர்ந்து ஒளியையும், வெப்பத்தையும் தருவதற்கு தீ என்று பெயர்.

தீ ஏற்படுவதற்கு மூன்று பொருட்கள் தேவைப்படுகிறது.
1.   எரியும் பொருள்
2.   தேவையான அளவு ஆக்ஸிஜன்
3.   தேவையான அளவு வெப்பம்.
                  
                                          தீ முக்கோணம்

தீயணைக்கும் விதங்கள்:
தீ உண்டாவதற்கு தேவைபடும் மூலபொருட்கள் மூன்றில் ஒன்றினை அகற்றி விட்டால் தீ அணைந்து விடும். எனவே தீயணைக்கும் விதங்கள் மூன்றாக அமையும்.

1.   எரிபொருளை அகற்றுதல் (STARVATION) :
எரியும் பொருளை தவிர்த்து சூழ்ந்துள்ள மற்ற பொருட்களை அவ்விடத்தில் இருந்து அகற்றி விடுதல், எரியும் பொருள் சிறியதாக இருப்பின் அதனை தனியே பிரித்து விடுவது. இதனை பட்டினி போட்டு அணைத்தல் என்றும் கூறப்படும்.
(உ.ம்)      எரியும் குடிசைகளை விட்டு இதர குடிசைகள் அகற்றுதல்.
ஒரு தீப்பற்றிய கிடங்கிலிருந்து எரியாத பொருளை அகற்றுதல்.

2.   குளிரச் செய்தல் (COOLING) :
எரியும் பொருளின் மீது, தண்ணீர் ஊற்றுவதால் அதனை எரிவதற்கு தேவையான வெப்பநிலை குறைக்கப்பட்டு தீ அணைந்து விடும்.

3.   காற்றை தடை செய்தல் (SMOTHERING) :
எரியும் பொருளுக்கு மேற்கொண்டு காற்று கிடைக்காமல் மூடி அணைத்தல் முறை. எரியும் பொருள் மீது நுரை பாய்ச்சுவதால், நுரை எண்ணெய் மீது படிந்து காற்றை தடை செய்து தீயை அணைத்துவிடும். இதனை திணரடித்தல் என்று கூறப்படும்.

1 கருத்து: