வியாழன், 24 மார்ச், 2011

தீயணைக்கும் விதங்கள்

          தீ உண்டாவதற்கு காற்று, எரிபொருள், வெப்பம் ஆகிய மூலபொருட்கள் தேவைப்படுகிறது. இந்த மூன்றில் ஒன்றினை அகற்றி விட்டால் தீ அணைந்து விடும். எனவே தீயணைக்கும் விதங்கள் மூன்றாக அமைகிறது.

1.   எரிபொருள் அகற்றுதல்:
          எரியும் பொருளை தவிர்த்து சூழ்ந்துள்ள மற்ற பொருட்களை அவ்விடத்திலிருந்து அகற்றி விடுதல், எரியும் பொருள் சிறியதாக இருப்பின் அதனை தனியே பிரித்து விடுவது. இதனை பட்டினி போட்டு அணைத்தல் (Starvation) என்று கூறுவர்.
     எ.கா:   எரியும் குடிசைகளை விட்டு இதர குடிசைகள் அகற்றுதல், ஒரு தீப்பற்றிய கிடங்கிலிருந்து எரியாத பொருளை அகற்றுதல்.

2.   குளிரச் செய்தல்:
          எரியும் பொருளின் மீது தண்ணீர் ஊற்றுவதால் அதனை எரிவதற்கு தேவையான வெப்பநிலை குறைக்கப்பட்டு தீ அணைந்து விடும். இதனை குளிர்வித்தல் (Cooling) என்று கூறுவர்.

3.   காற்றை தடை செய்தல்:
          எரியும் பொருளுக்கு மேற்கொண்டு காற்று கிடைக்காமல் மூடி அணைக்கும் முறை. எரியும் பொருள் மீது நுரை பாய்ச்சுவதால், நுரை எண்ணெய் மீது படிந்து காற்றை தடை செய்து தீயை அணைத்து விடும். இதனை திணரடித்தல் அல்லது ''ஸ்மாதரிங்'' (Smothering)) என்று கூறுவர்.

வெப்பம் பரவும் முறைகள்

1. வெப்பக் கடத்தல்
2. வெப்ப சலனம்
3. வெப்பக் கதிர் வீச்சு

வெப்பக் கடத்தல்:
           ஒரு பொருளின் உள் அணுக்கள் நகராமல், அணுக்கள் மூலம் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு வெப்பம் பரவுவது வெப்பக்கடத்தல் எனப்படும்.  எ.கா: இரும்பு கம்பி சூடேறுதல்.

வெப்ப சலனம்:
           வெப்பமானது, ஒரு பொருளின் உள் அணுக்கள் அசைவதின் மூலம் பரவினால் அதற்கு வெப்ப சலனம் என்று பெயர்.  எ.கா: தண்ணீர் கொதிப்பது.

வெப்பக் கதிர்வீச்சு:
          வெப்பமானது ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு வாயு மண்டலத்தை ( இடைப்பட்ட் மண்டலத்தை) உஷ்ணப்படுத்தாமல் பரவும் முறைக்கு வெப்பக் கதிர்வீச்சு என்று பெயர்.  எ.கா: சூரிய வெப்பத்தினால் பூமி உஷ்ணமானது.

சனி, 12 மார்ச், 2011

தீ விபத்தின் வகைகள்

“A” Class தீ விபத்து:
     எரிந்து சாம்பலாகும் பொருட்களான காகிதம், மரம், ரப்பர் போன்றவற்றில் ஏற்படும் தீ விபத்தாகும். இதற்கு மணல், தண்ணீர் பயன்படுத்தலாம்.

“B” Class தீ விபத்து:
     எண்ணெய், பெட்ரோல், டீசல் போன்ற திரவ பொருட்களில் ஏற்படும் தீ விபத்தாகும். இதனை எண்ணெய் தீ விபத்து என்றும் கூறுவர். இதற்கு மணல், நுரை பயன் படுத்தலாம்.

“C” Class தீ விபத்து:
     L.P.G, அசிடிலின் போன்ற வாயுக்களில் ஏற்படும் தீ விபத்தாகும். இதனை வாயு தீ விபத்து என்று கூறுவர். இதற்கு உலர் மாவு பயன்படுத்தலாம். சூழ்நிலைக்கேற்ப சம்மந்தப்பட்ட வாயுகலனின் வால்வுகளை மூட வேண்டும்.

“D” Class தீ விபத்து:
     உலோக தீ விபத்துக்கள், அலுமினியம், மெக்னீசியம் போன்ற உலோகங்களில் ஏற்படும் தீ விபத்தாகும். இதற்கு உலர்ந்த மணல், உயர் தர உலர்மாவு பயன்படுத்தலாம்.

“E” Class தீ விபத்து:
     மின்சார தீ விபத்து, மின்சாதனங்களில் ஏற்படும் தீ விபத்தாகும். சூழ்நிலைக்கேற்ப முதலில் மின் இணைப்பினை துண்டிக்க வேண்டும். பிறகு எரியும் பொருளுக்கேற்ப மணல், நுரை, உலர்மாவு கொண்டு அணைக்கலாம்.

வெள்ளி, 11 மார்ச், 2011

தீ என்றால் என்ன.

தீ என்பது ஒரு வேதியியல் மாற்றமாகும். பொருளானது எரியும் போது மிக வேகமாக ஆக்ஸினேற்றம் அடைகிறது. இதனால் வெப்பம், ஒளி மற்றும் பலவிதமான வாயுகள் வெளியேற்றுகிறது.
               
            ஒரு எரியக்கூடிய பொருள் தேவையான அளவு உஷ்ணமடைந்த்தும் காற்றிலுள்ள பிராண வாயுடன் சேர்ந்து ஒளியையும், வெப்பத்தையும் தருவதற்கு தீ என்று பெயர்.

தீ ஏற்படுவதற்கு மூன்று பொருட்கள் தேவைப்படுகிறது.
1.   எரியும் பொருள்
2.   தேவையான அளவு ஆக்ஸிஜன்
3.   தேவையான அளவு வெப்பம்.
                  
                                          தீ முக்கோணம்

தீயணைக்கும் விதங்கள்:
தீ உண்டாவதற்கு தேவைபடும் மூலபொருட்கள் மூன்றில் ஒன்றினை அகற்றி விட்டால் தீ அணைந்து விடும். எனவே தீயணைக்கும் விதங்கள் மூன்றாக அமையும்.

1.   எரிபொருளை அகற்றுதல் (STARVATION) :
எரியும் பொருளை தவிர்த்து சூழ்ந்துள்ள மற்ற பொருட்களை அவ்விடத்தில் இருந்து அகற்றி விடுதல், எரியும் பொருள் சிறியதாக இருப்பின் அதனை தனியே பிரித்து விடுவது. இதனை பட்டினி போட்டு அணைத்தல் என்றும் கூறப்படும்.
(உ.ம்)      எரியும் குடிசைகளை விட்டு இதர குடிசைகள் அகற்றுதல்.
ஒரு தீப்பற்றிய கிடங்கிலிருந்து எரியாத பொருளை அகற்றுதல்.

2.   குளிரச் செய்தல் (COOLING) :
எரியும் பொருளின் மீது, தண்ணீர் ஊற்றுவதால் அதனை எரிவதற்கு தேவையான வெப்பநிலை குறைக்கப்பட்டு தீ அணைந்து விடும்.

3.   காற்றை தடை செய்தல் (SMOTHERING) :
எரியும் பொருளுக்கு மேற்கொண்டு காற்று கிடைக்காமல் மூடி அணைத்தல் முறை. எரியும் பொருள் மீது நுரை பாய்ச்சுவதால், நுரை எண்ணெய் மீது படிந்து காற்றை தடை செய்து தீயை அணைத்துவிடும். இதனை திணரடித்தல் என்று கூறப்படும்.

திங்கள், 28 பிப்ரவரி, 2011

முன்னுரை

நண்பர்களே, எனக்கு தெரிந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த ப்ளாகரை உருவாக்கி உள்ளேன், இதில் ஏதேனும் தவறுகளோ அல்லது எனக்கு தெரியாத விஷயங்களோ இருந்தால், மன்னித்து எனக்கு தெரியபடுத்துங்கள்.