திங்கள், 7 மே, 2012

எரிதலின் இரசாயனம்

  • தீ என்பதை பற்றி அறிந்து கொள்ள சில அடிப்படை பெளதீகத்தையும், வெப்பத்தை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
  • தீ எப்படி உண்டாகிறது என்பதை நம்மை சுற்றியுள்ள பொருட்களின் நிலை மற்றும் அவைகளின் பெளதீகம், இரசாயன மாறுதல்களை கொண்டு அறிந்து கொள்ளலாம்.
  • உலகில் உள்ள பொருட்கள் திட, திரவ மற்றும் வாயு ஆகிய மூன்று நிலைகளில் காணப்படுகிறது.
  • அடர்த்தி என்பது ஒரு பொருளின் எடைக்கும், அதன் கன அளவிற்கும் உள்ள விகிதாச்சாரம் ஆகும். ( Density = Mass / Volume)
  • தண்ணீரின் அடர்த்தி எண் 1, பாதரசத்தின் அடர்த்தி எண் 13.6.


Specific Gravity என்பது குறிப்பிட்ட கனஅளவுள்ள ஒரு பொருளின் எடைக்கும், அதே கனஅளவுள்ள தண்ணீரின் எடைக்கும் உள்ள விகிதாச்சாரம் ஆகும்.

Specific Gravity or Relative Density = Mass of any value of Substance / Mass of equal value of Water

அதே போல

Vapour Density (VD) = Mass of any value of Gas / Mass of equal value of Hydrogen Gas.

VD of hydrogen U.D - 1
VD of Carbon di Oxide - 22
VD of Clorine - 35.5
VD of Methene - 0.8

இது பற்றி ஒரு தீயணைப்போர் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?

  • தண்ணீரின் அடர்த்தி எண்.1, பெட்ரோல் அடர்த்தி எண். 0.75 எனவே அது தண்ணீரில் மிதக்கும்.
  • இதனால் பெட்ரோல் தீ விபத்திற்கு தண்ணீர் பயன்படாது.
  • அதேபோல தீ விபத்துகளிலும் பிறவாயு கசிவு நேரங்களிலும், குறிப்பிட்ட எரிய கூடிய வாயு அல்லது விஷ வாயு தரைமட்டத்திலிருந்து மேற்பரப்பில் இருக்குமா? அல்லது தரை மட்டத்தில் இருக்குமா? என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப பணிபுரிய வசதியாக இருக்கும்.
  • சக்தி (ENERGY) என்பது ஒரு வேலையை செய்வதற்கு பயன்படுத்தப்படுவதாகும்.
  • நீர், வெளிச்சம், உஷ்ணம் மற்றும் மின்சாரம் ஆகியவை பலவித சக்திகளாகும்.
  • உஷ்ணம் ஒரு வித சக்தியாகும். இது இரசாயன மாற்றத்தினால் உண்டாகிறது.
  • அதிக வெப்ப நிலையிலுள்ள ஒரு பொருளிலிருந்து குறைந்த வெப்ப நிலை உள்ள பொருளுக்கு வெப்பம் பரவும். வெப்பத்தின் அளவுகோல் ஜீல்ஸ் (Joules).

வியாழன், 24 மார்ச், 2011

தீயணைக்கும் விதங்கள்

          தீ உண்டாவதற்கு காற்று, எரிபொருள், வெப்பம் ஆகிய மூலபொருட்கள் தேவைப்படுகிறது. இந்த மூன்றில் ஒன்றினை அகற்றி விட்டால் தீ அணைந்து விடும். எனவே தீயணைக்கும் விதங்கள் மூன்றாக அமைகிறது.

1.   எரிபொருள் அகற்றுதல்:
          எரியும் பொருளை தவிர்த்து சூழ்ந்துள்ள மற்ற பொருட்களை அவ்விடத்திலிருந்து அகற்றி விடுதல், எரியும் பொருள் சிறியதாக இருப்பின் அதனை தனியே பிரித்து விடுவது. இதனை பட்டினி போட்டு அணைத்தல் (Starvation) என்று கூறுவர்.
     எ.கா:   எரியும் குடிசைகளை விட்டு இதர குடிசைகள் அகற்றுதல், ஒரு தீப்பற்றிய கிடங்கிலிருந்து எரியாத பொருளை அகற்றுதல்.

2.   குளிரச் செய்தல்:
          எரியும் பொருளின் மீது தண்ணீர் ஊற்றுவதால் அதனை எரிவதற்கு தேவையான வெப்பநிலை குறைக்கப்பட்டு தீ அணைந்து விடும். இதனை குளிர்வித்தல் (Cooling) என்று கூறுவர்.

3.   காற்றை தடை செய்தல்:
          எரியும் பொருளுக்கு மேற்கொண்டு காற்று கிடைக்காமல் மூடி அணைக்கும் முறை. எரியும் பொருள் மீது நுரை பாய்ச்சுவதால், நுரை எண்ணெய் மீது படிந்து காற்றை தடை செய்து தீயை அணைத்து விடும். இதனை திணரடித்தல் அல்லது ''ஸ்மாதரிங்'' (Smothering)) என்று கூறுவர்.

வெப்பம் பரவும் முறைகள்

1. வெப்பக் கடத்தல்
2. வெப்ப சலனம்
3. வெப்பக் கதிர் வீச்சு

வெப்பக் கடத்தல்:
           ஒரு பொருளின் உள் அணுக்கள் நகராமல், அணுக்கள் மூலம் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு வெப்பம் பரவுவது வெப்பக்கடத்தல் எனப்படும்.  எ.கா: இரும்பு கம்பி சூடேறுதல்.

வெப்ப சலனம்:
           வெப்பமானது, ஒரு பொருளின் உள் அணுக்கள் அசைவதின் மூலம் பரவினால் அதற்கு வெப்ப சலனம் என்று பெயர்.  எ.கா: தண்ணீர் கொதிப்பது.

வெப்பக் கதிர்வீச்சு:
          வெப்பமானது ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு வாயு மண்டலத்தை ( இடைப்பட்ட் மண்டலத்தை) உஷ்ணப்படுத்தாமல் பரவும் முறைக்கு வெப்பக் கதிர்வீச்சு என்று பெயர்.  எ.கா: சூரிய வெப்பத்தினால் பூமி உஷ்ணமானது.

சனி, 12 மார்ச், 2011

தீ விபத்தின் வகைகள்

“A” Class தீ விபத்து:
     எரிந்து சாம்பலாகும் பொருட்களான காகிதம், மரம், ரப்பர் போன்றவற்றில் ஏற்படும் தீ விபத்தாகும். இதற்கு மணல், தண்ணீர் பயன்படுத்தலாம்.

“B” Class தீ விபத்து:
     எண்ணெய், பெட்ரோல், டீசல் போன்ற திரவ பொருட்களில் ஏற்படும் தீ விபத்தாகும். இதனை எண்ணெய் தீ விபத்து என்றும் கூறுவர். இதற்கு மணல், நுரை பயன் படுத்தலாம்.

“C” Class தீ விபத்து:
     L.P.G, அசிடிலின் போன்ற வாயுக்களில் ஏற்படும் தீ விபத்தாகும். இதனை வாயு தீ விபத்து என்று கூறுவர். இதற்கு உலர் மாவு பயன்படுத்தலாம். சூழ்நிலைக்கேற்ப சம்மந்தப்பட்ட வாயுகலனின் வால்வுகளை மூட வேண்டும்.

“D” Class தீ விபத்து:
     உலோக தீ விபத்துக்கள், அலுமினியம், மெக்னீசியம் போன்ற உலோகங்களில் ஏற்படும் தீ விபத்தாகும். இதற்கு உலர்ந்த மணல், உயர் தர உலர்மாவு பயன்படுத்தலாம்.

“E” Class தீ விபத்து:
     மின்சார தீ விபத்து, மின்சாதனங்களில் ஏற்படும் தீ விபத்தாகும். சூழ்நிலைக்கேற்ப முதலில் மின் இணைப்பினை துண்டிக்க வேண்டும். பிறகு எரியும் பொருளுக்கேற்ப மணல், நுரை, உலர்மாவு கொண்டு அணைக்கலாம்.

வெள்ளி, 11 மார்ச், 2011

தீ என்றால் என்ன.

தீ என்பது ஒரு வேதியியல் மாற்றமாகும். பொருளானது எரியும் போது மிக வேகமாக ஆக்ஸினேற்றம் அடைகிறது. இதனால் வெப்பம், ஒளி மற்றும் பலவிதமான வாயுகள் வெளியேற்றுகிறது.
               
            ஒரு எரியக்கூடிய பொருள் தேவையான அளவு உஷ்ணமடைந்த்தும் காற்றிலுள்ள பிராண வாயுடன் சேர்ந்து ஒளியையும், வெப்பத்தையும் தருவதற்கு தீ என்று பெயர்.

தீ ஏற்படுவதற்கு மூன்று பொருட்கள் தேவைப்படுகிறது.
1.   எரியும் பொருள்
2.   தேவையான அளவு ஆக்ஸிஜன்
3.   தேவையான அளவு வெப்பம்.
                  
                                          தீ முக்கோணம்

தீயணைக்கும் விதங்கள்:
தீ உண்டாவதற்கு தேவைபடும் மூலபொருட்கள் மூன்றில் ஒன்றினை அகற்றி விட்டால் தீ அணைந்து விடும். எனவே தீயணைக்கும் விதங்கள் மூன்றாக அமையும்.

1.   எரிபொருளை அகற்றுதல் (STARVATION) :
எரியும் பொருளை தவிர்த்து சூழ்ந்துள்ள மற்ற பொருட்களை அவ்விடத்தில் இருந்து அகற்றி விடுதல், எரியும் பொருள் சிறியதாக இருப்பின் அதனை தனியே பிரித்து விடுவது. இதனை பட்டினி போட்டு அணைத்தல் என்றும் கூறப்படும்.
(உ.ம்)      எரியும் குடிசைகளை விட்டு இதர குடிசைகள் அகற்றுதல்.
ஒரு தீப்பற்றிய கிடங்கிலிருந்து எரியாத பொருளை அகற்றுதல்.

2.   குளிரச் செய்தல் (COOLING) :
எரியும் பொருளின் மீது, தண்ணீர் ஊற்றுவதால் அதனை எரிவதற்கு தேவையான வெப்பநிலை குறைக்கப்பட்டு தீ அணைந்து விடும்.

3.   காற்றை தடை செய்தல் (SMOTHERING) :
எரியும் பொருளுக்கு மேற்கொண்டு காற்று கிடைக்காமல் மூடி அணைத்தல் முறை. எரியும் பொருள் மீது நுரை பாய்ச்சுவதால், நுரை எண்ணெய் மீது படிந்து காற்றை தடை செய்து தீயை அணைத்துவிடும். இதனை திணரடித்தல் என்று கூறப்படும்.

திங்கள், 28 பிப்ரவரி, 2011

முன்னுரை

நண்பர்களே, எனக்கு தெரிந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த ப்ளாகரை உருவாக்கி உள்ளேன், இதில் ஏதேனும் தவறுகளோ அல்லது எனக்கு தெரியாத விஷயங்களோ இருந்தால், மன்னித்து எனக்கு தெரியபடுத்துங்கள்.